ஏமன் நாட்டில் இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில், நேற்று (6) இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181 புலம்பெயர்ந்தோர் உட்பட 5 பணியாளர்களும் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.