13.5 C
Scarborough

எலான் மஸ்க்கிற்கு ஓலாப் ஸ்கோல்ஸ் கண்டனம்!

Must read

ஜேர்மன் சான்சலர் ஓலாப் ஸ்கோல்ஸ், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அரசாங்கம் தோல்வியடைந்ததையடுத்து பெப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ஜேர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ஓலாப் ஸ்கோல்ஸ் திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் மஸ்க் கூறியிருந்தார்.

இது தொடர்பாக உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஓலாப் ஸ்கோலஸ் கூறியதாவது:-

”ஜேர்மனியில் பேச்சு சுதந்திரம் உள்ளது. கோடீஸ்வரர் ஆக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் சரி, விரும்பியதைப் பேசலாம். ஆனால், தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பது என்றால் அதனை ஏற்க முடியாது ”என்று அவர் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article