17.6 C
Scarborough

‘என்டிஆர் 31’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Must read

ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் இணையும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாளன்று இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கு ‘டிராகன்’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு.

‘என்.டி.ஆர் 31’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், ‘சலார்’ படத்துக்குப் பின் பிரசாந்த் நீல் இயக்கும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article