16.5 C
Scarborough

உலகை சுற்றிவரும் பயணத்திலுள்ள அவுஸ்திரேலிய இளம் விமானி கொழும்பில் தரையிறங்கினார்

Must read

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன் வாலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார்.

கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை (CIAR) வந்தடைந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் ஊக்கத்துடன் வரவேற்றனர்.

இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (17) பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக CIAR ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பைரன் 45,000 கிலோ மீட்டர்கள், ஏழு கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article