19.5 C
Scarborough

உலகளாவிய குறியீட்டில் டொரண்டோ வீட்டுவசதி நிலவரம்!

Must read

உலகில் மிக உயர்ந்த வீட்டு விலைவாசி கொண்ட நகரங்களில் ஒன்றாக  டொரண்டோ விளங்குவதாக Oxford Economics இன் 2025 Global Cities குறியீடு கண்டறிந்துள்ளது. துறை சார்ந்தவர்களின் கொள்கை தவறுகள், அபிவிருத்தியின் தாமதங்கள் மற்றும் சனத்தொகை அதிகரிப்பு, கேள்வி அதிகரித்துள்ளமை போன்றவை இந்தப் பிரச்சினையின் பிரதான காரணங்கள் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசாங்கம் சமீபத்தில் $1 மில்லியனுக்கும் குறைவான விலையில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு GST-யை நீக்குவதாக உறுதியளித்திருந்தாலும், கட்டுப்படுத்தப்பட்ட வீட்டுவசதி கொள்கைகள், விலையுயர்ந்த மேம்பாட்டு கட்டணங்கள் மற்றும் தாமதமான ஒப்புதல்கள் ஆகியவை பெரும்பாலான வாங்குபவர்களுக்கு எட்டாத சந்தையை உருவாக்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

டொரண்டோ பிராந்திய Real Estate Board தரவுகளின்படி டொரண்டோ பகுதியில் ஒரு வீட்டின் சராசரி விலை May மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இன்னும் $1.1 மில்லியனுக்கும் அதிகமாகவே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் Toronto வின் மக்கள் தொகை 35 சதவீதம் அதிகரித்துள்ளது இதனால் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விலைவாசி உயர்ந்துள்ளதே தவிர வீடுகளின் கிடைப்பனவில் வளர்ச்சி ஏற்படவில்லை என நகர முதல்வர் Olivia Chow தெரிவித்துள்ளார்.

டொரண்டோவில் மட்டும் அபிவிருத்திக் கட்டணங்கள் ஒரு புதிய வீட்டின் விலையில் $100,000 க்கும் அதிகமாக உள்ளது அத்துடன் GTA அபிவிருத்திக் கட்டணங்களில் சில பகுதிகளில் அதை விட எளிதாக இரட்டிப்பாக கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளளாக கூறப்படுகிறது.

மாகாணங்களால் விநியோகிக்கக்கூடிய கூடுதல் கொடுப்பனவுகள் மூலம் நகரசபைகள் அந்தக் கட்டணங்களை 50 சதவீதம் குறைக்க உதவும் என பிரதமர் மார்க் கார்னி முன்னர் உறுதியளித்திருந்தார், இருப்பினும் அந்த முதலீடுகளுக்கான காலக்கெடுவை அவர் வழங்கவில்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article