உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு ரஷ்யா-உக்ரைன் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் திறன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுடனான தற்போதைய மோதல் தொடர்பாக அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சமீபத்தில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, போர் நிறுத்தத்தை கைவிட்டு, கிரிமியா மற்றும் நேட்டோ உறுப்பினர் இல்லாமல் அமைதி உடன்படிக்கைக்கு வருமாறு ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதியை வலியுறுத்துகிறார். இதுவே ரஷ்யாவின் நிலைப்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.