15.1 C
Scarborough

ஈரானை தாக்க வந்த அமெரிக்காவின் அசுரன்!

Must read

ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்பட 3 முக்கிய அணு நிலையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது, எந்த வகை குண்டுகளை பயன்படுத்தியது என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா வின் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் நேற்று மாலையே ஈரானுக்கு புறப்பட்டு சென்றன. நிலத்தடியில் உள்ள இலக்குகளை அழிக்கும் 15 டன் எடை கொண்ட குண்டு களை சுமந்து சென்றன.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அசுர ஆயுதம் ; ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது? | Deadly Weapon Used By Us To Strike Iran

நிலக்கீழ் அணுசக்தி நிலையத்திற்கு தாக்குதல்

இந்த விமானங்கள் ஈரானுக்குள் அதிரடியாக புகுந்து அங்குள்ள அணு நிலையங்கள் மீது குண்டுகளை வீசியது. போர்டேர் பகுதியில் நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையத்தை குறிவைத்து 6 குண்டுகள் வீசப்பட்டன.

மற்ற 2 அணுசக்தி தளங்கள் மீது 30 டோமா ஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த போர் விமானங்களை பயன்படுத்தி பங்கர் பஸ்டர் எனப்படும் ஜி.பி.யு-57 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதிக எடை கொண்ட இந்த வகை குண்டுகளை சுமந்து செல்ல பாமர் வகை விமானங்கள் தேவைப்படும்.

இதையடுத்து அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் இருந்து பி-2 ஸ்பிரிட்ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நேற்று மாலை குவாம் பகுதியில் உள்ள விமானப் படை தளத்துக்கு புறப்பட்டு சென்றது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பங்கர் பஸ்டர் குண்டுகள் சுரங்கத்தில் உள்ள இலக்குகளை அழிக்கக் கூடியது. சுமார் 50 ஆயிரம்அடி உயரத்தில் இருந்து அதிகமான குண்டு வீசப்படுவதால் கடுமையான சேதங்கள் இருக்கும்.

அதிக உயரம் காரணமாக இந்த குண்டுகள் அதிக இயக்க ஆற்றலைப் பெற்று ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகிறது.

இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ஆழத்தில் இருக்கும் அணு உலை அமைப்புகளை, இலக்குகளை தாக்க முடியும். அதன்படி ஈரானின் போர்டோவில் நிலத்தடியில் உள்ள அணு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

துல்லிய தாக்குதல் பாணியில் ஈரானுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட தளங்களை மட்டும் தாக்கிவிட்டு அமெரிக்க போர் விமானங்கள் வெற்றிகரமாக வெளியேறின.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article