Gaza வில் நல்ல நம்பிக்கையுடன் உடனடி போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கனடா அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது என்று கூறும் கனேடியப் பிரதமர் Mark Carney, வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்க Israel அரசாங்கம் தவறிவிட்டதாகவும், உதவியை மறுப்பதன் மூலம் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டினார்.
Hamas உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும், Israel அரசாங்கம் மேற்குக் கரை மற்றும் Gaza வின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் என்றும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
மேற்குக் கரையை இணைப்பதற்கான ஒரு குறியீட்டுத் தீர்மானத்தை Israel நாடாளுமன்றம் புதன்கிழமை அங்கீகரித்தது. மேற்குக் கரையை Israel உடன் இணைப்பதன் மூலம் சாத்தியமான பாலஸ்தீன அரசை உருவாக்குவது சாத்தியமில்லாது போகலாம். இது சர்வதேச அளவில் மோதலைத் தீர்ப்பதற்கான ஒரே யதார்த்தமான வழியாகக் கருதப்படுகிறது. கனடா இரு நாடுகளின் தீர்வை ஆதரிப்பதாகவும் Carney கூறினார்.
கடந்த மாதம் நடந்த NATO உச்சிமாநாட்டில் பிரதமர் தெளிவாக, இரு நாடுகள் தீர்வுக்கு பாலஸ்தீனத் தலைமை யூத தேசம் தமது மூதாதையர் தாயகத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என கூறியிருந்தார். அவசரமாகத் தேவைப்படும் உதவிகள் பாலஸ்தீனக் குடிமக்களைச் சென்றடைய Israel அரசாங்கம் தடையற்ற மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
France ஜனாதிபதி Emmanuel Macron தனது நாடு பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்த அதே நாளிலேயே கனேடிய பிரதமரின் கருத்துக்களும் வெளிவந்தமை விசேட அம்சமாகும். ஐரோப்பாவில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய நாடாக France உள்ளதுடன் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளுடன் உலகில் 140 க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன.