வாரியபொலவின் மினுவங்கேட் பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்து நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வாரியபொல பொலிஸார் தற்போது சம்பவ இடத்தை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை விமானப்படையின் சீன K-8 பயிற்சி ஜெட் விமானமே சற்று நேரத்திற்கு முன்பு வாரியப்பொலவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கு முன்னர் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தனர்.