இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை, அந்த அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்காவை நேற்று நியமனம் செய்துள்ளது.

