9.9 C
Scarborough

இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Must read

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு முழுமையான வெள்ளைப்பந்து (White-ball) தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தவுள்ளது. இத்தொடரில் தலா மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 (T20I) போட்டிகள் எதிர்வரும் மார்ச் 13 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதில் T20I தொடர் சார்ஜாவிலும், ஒருநாள் தொடர் டுபாயிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 8ஆம் திகதி நிறைவடையவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடர் முடிவடைந்து ஐந்தே நாட்களில் இந்த வு20ஐ தொடர் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐபிஎல் மற்றும் PSL (பாகிஸ்தான் சுப்பர் லீக்) தொடர்கள் மார்ச் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே இந்த ஒருநாள் தொடர் நிறைவுக்கு வரவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, குறித்த இரண்டு லீக் தொடர்களுக்காகவும் தசுன் ஷானக்க, ரஷீத் கான், குசல் பெரேரா மற்றும் நூர் அஹ்மட் போன்ற நட்சத்திர வீரர்கள் பல்வேறு அணிகளில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது இருதரப்பு T20I தொடர் இதுவாகும். இதற்கு முன்னர் 2024 பெப்ரவரி மாதம் முதல் தொடர் நடைபெற்றது.

அதேபோல, ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது இருதரப்பு ஒருநாள் தொடராக இது அமையவுள்ளது.

இத்தொடருக்கான போட்டிகள் சார்ஜா மற்றும் டுபாய் ஆகிய மைதானங்களில் பின்வருமாறு நடைபெறவுள்ளன:

T20I தொடர் (சார்ஜா): மார்ச் 13, 15 மற்றும் 17 ஆகிய திகதிகளில் போட்டிகள் நடைபெறும்.

ஒருநாள் தொடர் (டுபாய்): மார்ச் 20, 22 மற்றும் 25 ஆகிய திகதிகளில் போட்டிகள் நடைபெறும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article