2025 ஆம் ஓகஸ்ட் முதலாம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் அமெரிக்காவுடன், இலங்கை வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளலாம் என எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொருளாதார மேம்பாட்டு இணை அமைச்சர் அனில் ஜெயந்த இன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர், இலங்கை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணங்கத் தவறினால், இலங்கையின் ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர், மேலும் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை நடத்தும் என்று இணை அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.