தனது காதலியை கொலை செய்ததாகக் கூறி இளைஞன் ஒருவன் வென்னப்புவ காவல்துறையில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ – வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (19) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாய்க்கால் பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சந்தேகநபரான 21 வயது இளைஞனும், குறித்த பெண்ணும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதல் உறவில் இருந்துள்ளார்கள்.
இந்த நிலையில் குறித்த பெண் காதல் உறவை முறித்து கொள்ள கோரியதால், அது தொடர்பில் பேசுவதற்காக இருவரும் அவர்கள் வீட்டில் சந்தித்துள்ளனர்.
இதன் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதனால் கோபம் அடைந்த இளைஞன் காதலியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் வென்னப்புவ காவல்துறை நிலையத்தில் இளைஞன் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.