ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலங்கை பொறுப்புகூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இதற்கமைய கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 12,348 ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7459 ஆவணங்கள் திறந்த மூலங்களில் இருந்தும் 10,4889 ஆவணங்கள் இரகசியமான முறையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக பேணப்படுவதாகவும் இவற்றில் மீரர்களுக்கான பொறுப்பாளிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஒப்பிட்டளவில் குறைவாக காணப்படுவதாகவும் இலங்கை பொறுப்பு கூறல் செய்திட்டம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்து 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் என்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் மனித குலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வழக்கு தொடரல் தேவைக்காக உரியவாறு களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.

