2.8 C
Scarborough

இப்போதும் உறுதியாக இருக்கிறேன்” – கனேடிய பிரதமர் மார்க் கார்னி!

Must read

தாம் ஆற்றிய உரையைத் திரும்பப் பெறும்படி அமெரிக்கத் தரப்பில் விடுக்கப்பட்ட தகவலை மறுத்த கனடா பிரதமர் மார்க் கார்னி, “நான் சொன்னவற்றில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய மார்க் கார்னி, அமெரிக்காவைக் கோடிட்டுக் காட்டி, வல்லரசு நாடுகள் உலக ஒழுங்கைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடியாகப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்கா இருப்பதால்தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்கொட் பெசென்ட், “பிரதமர் கார்னி தனது உரையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தொலைபேசி வாயிலாக ட்ரம்ப்பிடம் மன்னிப்புக் கோரினார்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மார்க் கார்னி டாவோஸில் நான் என்ன பேசினேனோ, அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன் என்பதை ஜனாதிபதி ட்ரம்ப்பிடமே நேரடியாகக் கூறிவிட்டேன்.” ” ட்ரம்ப்புடன் உக்ரைன், வெனிசுலா மற்றும் ஆர்க்டிக் பாதுகாப்பு குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினேன்.” என்று கூறியுள்ளார்.

அதேநேரம் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால், கனடாப் பொருட்கள் மீது 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் குறித்த லாவோஸ் உரையின் பின்னர் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த கார்னி, “கனடா சீனாவுடன் ஒருபோதும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) நாடவில்லை.

ட்ரம்ப்பின் இந்த வரி மிரட்டல் என்பது வரவிருக்கும் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான ஒரு உத்தி மட்டுமே” என்று குறிப்பிட்டார். கனடாவின் கார்னோலா எண்ணெய் மீதான வரியைச் சீனா 85 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்துள்ளது.

பதிலுக்கு, சீன மின்சார வாகனங்கள் (EV) மீது கனடா விதித்திருந்த 100% வரியை 6.1% ஆகக் குறைத்துள்ளது.

இதுவே அமெரிக்காவின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் சக்திகளுக்கு இடையே கனடா தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கப் போராடி வருவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article