13.5 C
Scarborough

இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 11 – 2025 செவ்வாய்க்கிழமை

Must read

  • குரோதி வருடம் தை மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.02.2025
  • சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
  • இன்று இரவு 07.50 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
  • இன்று இரவு 07.31 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
  • மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
  • சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீக சொத்துகளை கையகப்படுத்துவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலையை மாற்றுவீர்கள். உறவினர்களை விருந்துக்கு அழைத்து மரியாதை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

எதிர்பார்த்த வங்கிக் கடன்களை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உருவாக்குவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு வைத்தியம் பார்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

சகோதர உறவுகளால் மன சஞ்சலம் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் பயனடைய மாட்டீர்கள். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருந்து மாத்திரை சாப்பிடுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். கால்நடை வளர்ப்பிலும் கோழிப்பண்ணையிலும் மிகச் சிறந்த லாபம் பார்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்

உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலை பக்குவமாக செய்வீர்கள். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவீர்கள். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தியை பெருக்கி முன்னேற்றம் அடைவீர்கள். கடல் கடந்து தொழில் செய்வதில் உள்ள இடையூறுகளை விலக்குவீர்கள். புதிய தொழில் தொடங்க ஆயத்தமாவீர்கள். பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இழப்பை எதிர்கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள். கடனை அடைக்காமல் சிரமப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

நம்பியவர்கள் கைவிட்டதால் ஏமாற்றம் அடைவீர்கள். பணியிடங்களில் வீண் பழியை சுமப்பீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையால் தடுமாற்றம் அடைவீர்கள். ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். பங்கு சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்

தாறுமாறாக பணப்புழக்கம் அதிகரித்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பீர்கள். காதலியின் உதவியால் முக்கிய கடனை அடைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு பிரகாசமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். குடும்ப நலனுக்காக பெண்களின் சேமிப்பை பெறுவீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை காண்பீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்ந்து நல்ல விலைக்கு விற்பீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். வேலையாட்களின் உதவி யால் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். சந்திராஷ்டமம். எதிலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்

உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவதால் மன உளைச்சல் அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்கும் உறவினர்களை தவிர்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடனை மிகவும் சிரமப்பட்டு திருப்பிச் செலுத்துவீர்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். உங்களைத் தேடி வரும் அரசாங்க பதவியில் உட்காருவீர்கள். கட்டுமான தொழிலில் புதிய முத்திரை பதிப்பீர்கள். நகைகள் வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வதால் மனக்கவலை அடைவீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையாமல் கைக்காசை செலவழிப்பீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article