மேஷம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
பூர்வீக சொத்தில் பணவரவு உண்டு. பிள்ளைகள் சொல்படி நடப்பர். எதிரிகள் தொலைவர். உடன்பிறந்தோர் இணக்கத்துடன் இருப்பர். பணியாளர் கேட்ட கடனுதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். கணவரின் பாசத்தில் திளைப்பர். உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
பெண்களுக்கு நன்மை உண்டாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பண நெருக்கடி குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். மனம் சாந்தமாகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
வேற்றுமதத்தவர் உதவுவார். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். நவீன தொழில் நுட்பத்தை தொழிலில் புகுத்துவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
சிம்மம்
வாராக் கடன் வந்து சேரும். வெளிநபரிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகள் வேலைக்காக வெளிநாடு செல்வர். உணவில் கட்டுப்பாடு தேவை. வீண் செலவினை குறைப்பீர்கள். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர். உடல் நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
கடையை விளம்பரத்தால் மக்களுக்கு பிரபலப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குச்சந்தை லாபத்தை தரும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உங்கள் செல்வாக்கு சமூகத்தில் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும் மற்றும் மரியாதை கூடும். வெளி வட்டாரத்தில் வாக்குவாதம் வேண்டாம். வியாபாரத்தில் வரவுக்கேற்ற செலவு வரும். உடன்பிறந்தவர் ஒத்துழைப்பர். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்திற்கு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
விருச்சிகம்
பிள்ளைகள் வெளியூர் செல்வர். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். நீண்ட நாட்களாக உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். விற்பனையாளர்களுக்கு விற்பனை கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
பகுதி நேரமாக பெண்கள் பணிபுரிவர். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வீட்டினை அழகுபடுத்த பொருட்களை வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மகரம்
உங்கள் நிர்வாகத் திறன் மற்றும் பேச்சுத் திறன் கூடும். உத்யோகத்தில் சலுகைகள் கிட்டும். உயரதிகாரிகள் பொறுப்புகளை ஒப்படைப்பர். தொழில் மந்தம் நீங்கும். கணவரின் கருத்தை கேட்பது நல்லது. பொறுப்புகள் தேடி வரும். உடல் உபாதை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். விளையாட்டுத் துறையில் வெற்றிகள் குவியும். வாகன பராமரிப்பு செலவு உயரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பிள்ளைகளுக்கு தங்கள் மேல் மரியாதை கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

