16.5 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 18.08.2025

Must read

மேஷம்
எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். ரியல் எஸ்டேட், கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமானம் உயரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்
பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிட்டும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்
வழக்குகள் இழுத்தடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நலம் தேறும். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

கடகம்
குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். கூட்டு வியாபாரிகளிடையே நல்லிணக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்
விரும்பிய பொருள்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். காதலர்களிடையே ஊடல் விலகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் மேலிடத்தில் நெருக்கமாவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி
உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். பழுதான வாகனம் சரியாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்
இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

விருச்சிகம்
பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளுக்கு இடமுண்டு. வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் நடக்கும். அது தங்களுக்கு மகிழ்ச்சி தரும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

தனுசு
ஷேர் மூலம் பணம் வரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். அரைகுறையாக கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்
எதிர்பார்த்த பணம் கிடைத்து விடும். தங்கள் குடும்பத்தில் உள்ள நல்ல விசயங்களுக்கு தம்பதிகள் முடிவெடுத்து செயல்படுவர். நினைத்த காரியம் வெற்றி பெறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்
வழக்குகளில் வெற்றி கிட்டும். தங்கள் வங்கியில் டெபாசிட் உயரும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். யோகா மற்றும் நடன வகுப்புகளில் மனம் நாடும். அதற்குண்டான முயற்சிகள் பலிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்
எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். கவலை வேண்டாம். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. யாரிடமும் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article