மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

