மேஷம்
எதிர்பாராத நன்மைகள் கிட்டும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். அண்டை வீட்டார்கள் உதவுவர். தன்னம்பிக்கை துளிர்விடும்ம். அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். சுலபமாக அதனை முடித்துக் காட்டுவீர்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். உற்சாகமான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
இன்று கிருத்திகை, ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆதலால், சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. மேலும், முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
மிதுனம்
பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். புதிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள். வெளிநாட்டு விசா கிடைக்கும். வியாபாரிகள் குறுகிய தூர பயணம் செய்வீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். தேகம் பளிச்சிடும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். பெண் உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் தங்களை பாராட்டுவார்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
துலாம்
திருமண முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டிற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். அதற்குண்டான விசா கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி தங்கள் தவறை உணர்வார். தேகம் பளிச்சிடும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
விருச்சிகம்
தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. காரணம் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
தனுசு
வேலையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். சகோதர வழியில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நீங்கள் நீண்ட நாட்களாக காணாமல் போன பொருள் மீண்டும் வந்தடையும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மகரம்
கூட்டுத்தொழிலில். வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் இணைவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். உடல் நலம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் குவியும். அரசு தொடர்பானவைகளில் சாதகமான பலன் உண்டு. பங்குச் சந்தை லாபம் தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் மேற்படிப்பை துவங்வர். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆவேசமாக பேச வேண்டாம். தேக ஆரோக்கியம் சிறக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
மாணவர்கள் திறன் கூடி தாங்கள் தங்கள் பள்ளியில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாமியாரிடம் அனுசரிப்பது நல்லது. வெளி வட்டாரத்தில் செல்வாக்கு பெருகும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உடல் வலி நீங்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். எடுத்த காரியம் வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு