19.5 C
Scarborough

இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள என்.பி.பி. அரசுக்கு முதுகெலும்பில்லை!

Must read

“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீளப் பெற வேண்டும்.” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை. அரசின் நிலைப்பாடு கேலிக்கூத்தானது. இந் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய நேர்காணலின்போது இலங் கையில் இனப்படுகொலை இடம்பெற் றுள்ளதாகக் கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். இதனை நானும் அவதானித்தேன்.

இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு மேற்பட்ட கருத்து. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசின் நகைப் புக்கிடமான, கேலிக்கூத்தான மனநி லையை இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் என்பவர் சர்வதேசத்துக்குப் பதில் சொல்லக் கூடியவர். ஆகவே, அவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்திருக்க கூடாது. இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்க் கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை. அதனால்தான் இவ்வாறான பிழையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.” – எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article