15.1 C
Scarborough

இந்த ஆண்டு கனடா 2% NATO செலவின உறுதிமொழியை நிறைவேற்றும்!

Must read

பனிப்போருக்குப் பின்னர் என்றும் இல்லாத அளவிற்கு தனது இராணுவ வரவுசெலவுத்திட்டத்தை விரைவாக அதிகரிக்க வேண்டிய கடுமையான அழுத்தத்தை கனடா தனது நட்பு நாடுகளிடமிருந்தே எதிர்கொண்டுள்ளதன் பின்னணியில், இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 9 பில்லியன் டொலரை ஒதுக்கவுள்ளது.

இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீத NATO இலக்கை திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஐந்து வருடங்கள் முன்னதாகவே அடையும் என்று பிரதமர் மார்க் கார்னி திங்கள்கிழமை காலை டொரண்டோவில் அறிவித்தார். இதனடிப்படையில் பல தசாப்தங்களாக இருந்த கோரிக்கையை கனடா முதன்முறையாக நிறைவேற்றுகின்றது.

அமெரிக்கா தனது சந்தைகளை அணுகுவதற்கு கட்டணம் வசூலித்து, நமது கூட்டுப் பாதுகாப்பிற்கான அதன் ஒப்பீட்டு பங்களிப்பைக் குறைத்து, அதன் மேலாதிக்கத்தைப் பணமாக்கத் தொடங்குகிறது என்று பிரதமர் எச்சரித்தார்.

NATO தற்போது கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொருளாதாரத்தை ஆண்டுக்கு $3.1 trillion ஆகக் கணிப்பிடுகின்றது, இதன் மூலம் அதன் இரண்டு சதவீத தொகை சுமார் $62.5 billion மதிப்புடையதாக இருக்கும் என்று மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நமது இறையாண்மையை சிறப்பாகப் பாதுகாப்பதற்காக Canadian Coast Guard இன் எல்லை, பாதுகாப்பு ஆணை மற்றும் திறன்களை விரிவுபடுத்தி அதனை நமது NATO உடன் ஒருங்கிணைப்பேன் என்று Carney கூறினார். எனினும் Canadian Coast Guard வீரர்களுக்கு ஆயுதம் வழங்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

கார்னியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் Pete Hoekstra இது கூட்டணியை வலுப்படுத்துவதற்கும் நமது பகிரப்பட்ட பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான படி என்றும் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article