வியாழக்கிழமை விபத்துக்குள்ளான இந்தியா விமானத்தில் இருந்ததாக நம்பப்படும் கனேடியரான Mississauga ஐ சேர்ந்த பல் மருத்துவர் நிராலி சரேஷ்குமார் படடேல் என அவரது கணவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
லண்டனுக்கு சென்ற விமானம் வியாழக்கிழமை வடமேற்கு இந்திய நகரமான அகமதாபாத்தில் புறப்பட்ட ஐந்து நிமிடங்களின் பின்னர் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் மதியம் 1:38 ஒரு மருத்துவக் கல்லூரியில் மோதியது, கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்களும் பலர் இறந்தனர். பல தசாப்தங்களில் இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் தலைநகரான 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரமான அகமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் விபத்திற்குள்ளானது. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டன. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்ததை உறுதிப்படுத்தினார். குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி இறந்தவர்களில் ஒருவராகும்.
லண்டன், Gatwick விமான நிலையத்திற்குச் செல்லும் விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், அதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், ஏழு போர்த்துக்கேயர்கள் மற்றும் ஒரு கனேடியர் இருந்ததாகவும் Air India தெரிவித்துள்ளது.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, X தளத்தில் வெளியிட்ட அறிக்கையை ஒன்றில், அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் London க்குச் சென்ற Air India விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து மிகவும் துயரமடைந்தேன், அதில் ஒரு கனேடியர் உட்பட எனது எண்ணங்கள் விமானத்தில் இருந்த அனைவரின் அன்புக்குரியவர்களிடமும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
Boeing 787 விமானத்தின் முதல் விபத்து இதுவாகும். விபத்து தொடர்பான மேலதிக விபரங்களை திரட்டுவதில் Boeing நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.