6.2 C
Scarborough

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்தும் கனடா!

Must read

கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் புதிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளனர். பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். இந்தப் புதிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, தென்னாப்பிரிக்காவில் நடந்த G20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக Carney யும் இந்திய பிரதமர் Narendra Modi யும் சந்தித்தனர், இரு நாடுகளும் ஒரு பதட்டமான உறவை மீண்டும் புதுப்பிப்பதற்காக பாடுபடுகின்றன.

பிரதமர் அலுவலகத்தின் தகவலின் படி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் Carney ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல வருட பதற்றத்திற்குப் பின்னர் அமெரிக்காவுடனான வர்த்தக முரண்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுக்க Carney முயன்று வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பு கடந்த ஆறு மாதங்களில் இரு தலைவர்களுக்கும் நடைபெறும் இரண்டாவது சந்திப்பாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article