7.8 C
Scarborough

இசைத் துறையில் ஏ.ஐ. டெக்னாலஜி ஆதிக்கம்: சாம் சி.எஸ் தகவல்

Must read

இசைத்​துறை​யில் ஏ.ஐ டெக்​னாலஜி அதிக ஆதிக்​கம் செலுத்துவதாக இசை அமைப்​பாளர் சாம் சி.எஸ் சொன்​னார். இது பற்றி செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: நான் இசை அமைத்​துள்ள ‘ரெட்ட தல’, மோகன்​லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்​கள், டிச. 25 ம் தேதி வெளிவரு​கின்​றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்​சம் அதி​க​மாக உழைத்​திருக்​கிறோம்.

இசைக்கு முக்​கி​யத்​து​வம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்​துள்ள இரண்டு கேரக்​டர்​களுக்​கும் வித்​தி​யாச​மான முறையில் இசை அமைத்​திருக்​கிறேன். இதில் சித்தி இட்​னானி நடித்​துள்ள பெண் கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படம் நம் வாழ்க்​கையை பிர​திபலிப்​ப​தாக இருக்​கும். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடு​வதற்கு முன் அவர் குரலில் ட்ராக் போல ஏ.ஐ.-யில் எடுத்​தோம்.

அதைக் கேட்டு தனுஷே ஆச்​சரியப்​பட்​டார். டெக்​னாலஜி எப்​போதும் தவறில்​லை. நாம் எப்​படி பயன்படுத்​து கிறோம் என்​பது​ தான் முக்​கி​யம். இசைத்​துறை​யில் ஏ.ஐ.டெக்​னாலஜி அதிக ஆதிக்​கம் செலுத்​து​வ​தாக இருக்​கிறது. ‘மகாவ​தார் நரசிம்​மா’ அனிமேஷன் படத்​துக்கு இசை அமைத்த பிறகு நிறைய பக்தி படங்​களுக்கு இசை அமைக்க வாய்ப்​பு​கள் வந்​து ​கொண்டிருக்கின்​றன. பக்தி பாடல் வாய்ப்​பு​களும் வரு​கின்​றன. ஐயப்​பன் பாடல் ஒன்றை எழுதி இசை அமைத்​துள்​ளேன். அது விரை​வில் வெளி​யாகும். ‘நாகினி’ தொலைக்​காட்​சித் தொடருக்கு டைட்​டில் பாடல் அமைத்​துள்​ளேன்.

சர்​தார் 2, ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் தனுஷ் நடிக்​கும் படம், புஷ்கர் காயத்ரி இயக்​கும் படம், கன்​னடத்​தில் ஒரு படம், மாதவன், கங்​கனா நடிக்​கும் பான் இந்​தியா படம் என சுமார் 10 படங்​களுக்கு இசை அமைத்து வரு​கிறேன். பிசி​யாக இருப்​பதை ரசிக்​கத் தொடங்கி இருக்​கிறேன்​. இவ்​வாறு சாம்​ சி.எஸ்​ கூறி​னார்​.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article