19.6 C
Scarborough

ஆப்கானிஸ்தான் நிலஅதிர்வு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வு

Must read

கிழக்கு ஆப்கானிஸ்தானில்  பதிவான சக்தி வாய்ந்த நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.57 க்கு 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீற்றர் தொலைவில், 08 கிலோமீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வு மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் மற்றொரு நிலஅதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இயற்கை அனர்த்தத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்குண்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article