7.8 C
Scarborough

அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’

Must read

கணேஷ் கே பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம். இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சுந்​தர் ஆறு​முகம் தயாரிக்​கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்​களுக்கு பிறகு மூன்​றாவது முறை​யாக ரவி மோக​னுடன் இந்​நிறு​வனம் இணைந்துள்​ளது.

சாம் சிஎஸ் இசை அமைக்​கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​கிறார். அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், தமிழ்​நாடு காவல்​துறை முன்​னாள் தலைமை இயக்​குநர் சங்​கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகி​யாக அறி​முக​மாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்​கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படம் பற்​றிய பேசிய இயக்​குநர் கணேஷ் கே பாபு, “அரசி​யல்​வா​தி​கள் குறித்து எத்​தனையோ திரைப்​படங்​கள் வந்​திருந்​தா​லும் அவர்களின் தனிப்​பட்ட வாழ்க்​கை, உறவு​கள் மற்​றும் உணர்​வு​கள் குறித்து பெரி​தாக திரை​யில் பேசப்​பட​வில்​லை. இந்த திரைப்​படம் ஒரு சட்​டமன்ற உறுப்​பினரின் இன்​னொரு பக்​கம் குறித்து அலசுகிறது.

உணர்​வுப் பூர்​வ​மான அரசி​யல் த்ரில்​ல​ராக இது உரு​வாகி வருகிறது. தற்​போது போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வரு​கின்​றன” என்று தெரி​வித்​தார். ரவி மோக​னின் 34-வது படமான இப்​படத்​தின் டீஸர் விரை​வில் வெளி​யாக இருக்​கிறது. இதன் டப்​பிங் இப்​போது தொடங்​கி இருக்​கிறது.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article