14.3 C
Scarborough

அமெரிக்க ஜனாதிபதி – நேட்டோ பொதுச்செயலாளரிடையே பேச்சுவார்த்தை

Must read

டென்மார்க் வசமுள்ள கிரீன்லாந்தை, அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளருடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் என்று கூறிய ட்ரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இது தொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது:

சர்வதேச பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம். அதை அமெரிக்காவுக்கு வேண்டும். இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்பு இதைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. தற்போது ஒரு முக்கியமான நபருடன் அமர்ந்திருக்கிறேன்.

நமக்கு சர்வதேச பாதுகாப்பு தேவை என்பது உங்களுக்கு தெரியுமா மார்க்? வெறும் பாதுகாப்பு அல்ல, சர்வதேச பாதுகாப்பு. நம்முடைய கடற்பகுதியை சிலர் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது பற்றி நான் உங்களிடம் பேசுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்க்டிக் பகுதியில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை மார்க் ரூட் உறுதி செய்த போதும், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்ப்பின் முயற்சி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பின்னர், மார்க் ரூட் கூறுகையில், ‘வடக்கு மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள வழித்தடங்களை சீனா பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவும் மீண்டும் ஆயுதங்களை குவித்து வருகின்றன. ஐஸ் பிரேக்கர் கப்பல்கள் நம்மிடம் பற்றாக்குறையாக உள்ளது. அமெரிக்கா தலைமையில் 7 ஆர்க்டிக் நாடுகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. மேலும், இந்தப் பகுதியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். சில விடயங்கள் மாறுவது நமக்கு தெரியும். எனவே, நாம் அங்கு இருக்க வேண்டும்,’ எனக் கூறினார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article