அமெரிக்காவின் தண்டனை வரி விதிப்புக்கள் தொடர்பிலான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மார்க் கார்னி தலைமையில் நேற்று நடைபெற்றது. எவ்வாறாயினும் இது குறித்த விரிவான அறிவிப்புக்கள் எவையும் ஆளும் கட்சியின் பக்கமிருந்து வரவில்லை.
இதன்போது அமெரிக்க வரி விதிப்புக்கள் கனேடிய சந்தையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதென ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
கனடாவின் அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும் கனடாவின் மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்களை எதிர்கொள்வதற்காக அதிகாரிகள் நெறிப்படுத்தப்படுவர் என்று மார்க் கார்னி தரப்பு அறிவித்துள்ளது.
அதேபோல் இது குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்களை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் ஆளும் தரப்பினர் கூறுகின்றனர்.