16.8 C
Scarborough

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் – ஸெலன்ஸ்கி

Must read

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக இருக்கிறது’ என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ட்ரம்ப் உடனான உறவை சரி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் பிரித்தானிய அதிகாரிகளுடன் ஸெலன்ஸ்கி தலைமையிலான அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு ஸெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில்;

தலைநகர் கிவ்வில் பிரித்தானிய மற்றும் உக்ரைன் நாடுகளின் அதிகாரிகள் இடையே மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைதி மற்றும் இருநாடுகளுக்குமிடையிலான உறவு குறித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. எங்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரித்தானியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷ்யாவுடனான போரை நியாயமான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உக்ரைன் உறுதியாக உள்ளது.

அடுத்த வாரம் உக்ரைன் அதிகாரிகளுடன் சேர்ந்து சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். திங்கட்கிழமை (10) சவுதி அரசரை சந்தித்துப் பேச இருக்கிறோம். தொடர்ந்து, மறுநாள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், இராணுவ அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக இருக்கிறது

போர் தொடங்கியது முதல் உக்ரைன் அமைதியைத் தான் வலியுறுத்தி வருகிறது. யதார்த்தமான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை விரைந்து செயற்பாட்டுக்கு கொண்டு வருவதுதான் முக்கியம், எனக் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article