2.8 C
Scarborough

அமெரிக்காவுடனான கனடாவின் உறவுநிலை எதுவுமே இயல்பாக இல்லை!

Must read

Ontario மாகாண முதல்வர் Doug Ford மற்றும் New Brunswick மாகாண முதல்வர் Susan Holt ஆகிய இருவருமே, அமெரிக்காவுடனான தற்போதைய உறவில் இயல்பாக எதுவுமே இல்லை என்ற பிரதமர் Mark Carney யின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

​”நான் அவருடன் உடன்படுகிறேன். அமெரிக்கர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகமும் இதை கவனித்துக்கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று Ottawa வில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Ford தெரிவித்தார்.

அதேவேளை அமெரிக்காவுடனான உறவில் “எதுவும் முன்பைப் போல இல்லை” என்றும், தங்களின் நீண்டகால அயலவரையும் வர்த்தக கூட்டாளிகளையும் New Brunswick மக்களால் அடையாளம் காண முடியவில்லை என்றும் தான் ஒத்துக்கொள்வதாக Holt கூறினார்.

​New Brunswick மற்றும் Maine எல்லைகளில் குடியேற்ற அமுலாக்கப் பிரிவினர் இருப்பதை இப்போது New Brunswick இல் நாங்கள் காண்கிறோம், என்று அவர் கூறினார். இது எங்கள் அனைவரையும் மிகவும் அசௌகரியமாக உணர வைக்கிறது. என்றார்.

நாட்டின் தலைநகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்திற்காக மாகாண முதல்வர்கள் ஒன்று கூடியுள்ளனர். வர்த்தக பேச்சுவார்த்தைகள் நெருங்கி வரும் வேளையிலும், Trump மேலும் பல இறக்குமதி வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி வரும் சூழலிலும், அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைந்த Team Canada நிலைப்பாட்டை முன்வைக்க முதல்வர்கள் விரும்புகிறார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article