Donald Trump வியாழக்கிழமை கனடா இறக்குமதிகளுக்கு August 1 முதல் 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் fentanyl நெருக்கடி காரணமாகவே கனடா மீது வரிகள் முதலில் வரி விதிக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார். இது எங்கள் நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க கனடா தவறியதன் விளைவு என்றும் அவர் மேலும் கூறினார்.
fentanyl கட்டுப்பாட்டிற்கு கனடா என்னுடன் இணைந்து செயல்பட்டால், ஓர் உடன்பாட்டைப் பற்றி நாங்கள் பரிசீலிப்போம், என்று கூறும் அமெரிக்க ஜனாதிபதி, கனடாவுடனான அமெரிக்காவின் உறவைப் பொறுத்தே இந்த வரிகள் மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கிச் செல்லும் என்றும் கூறினார்.
இதனிடையே, வியாழக்கிழமை இரவு, கடந்த june மாதம் G7 தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது நிர்ணயிக்கப்பட்ட July 21 காலக்கெடுவைப் புதுப்பித்து கருத்து வெளியிட்ட பிரதமர் Carney கனடா, அமெரிக்காவுடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு August 1 ஆம் திகதி என்ற திருத்தப்பட்ட காலக்கெடுவை நோக்கி கனடா செயல்படும் என்று பதிவிட்டுள்ளார்.
வட அமெரிக்காவில் fentanyl போதைப்பொருளை தடுக்க கனடா முக்கிய முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கூறும் பிரதமர், எங்கள் இரு நாடுகளிலும் உள்ள உயிர்களைக் காப்பாற்றவும் சமூகங்களைப் பாதுகாக்கவும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
கனடாவுக்கு எதிராக வரியை விதிக்க அமெரிக்கா fentanyl ஐ காரணம் காட்டினாலும் July மாத அறிக்கைகளின் பிரகாரம் fentanyl ஐ தடுப்பதில் கனடா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளமை Manhattan நிறுவத்தின் அறிக்கையின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.