அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் உதவி செயலர் டொனால்ட் லு ( Donald Lu) இன்று டிசம்பர் 3 முதல் டிசம்பர் 10 வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அவரது பயணம் பிராந்திய செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த தெற்காசியாவின் முக்கிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் புது டெல்லியில், இந்திய-பசுபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அமெரிக்க-இந்தியா ஒத்துழைப்பு குறித்து உதவிச் செயலாளர் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதன்பின்னர், அமெரிக்க-இலங்கை கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, டிசம்பர் 5 ஆம் திகதியன்று, அமெரிக்க உதவிச் செயலாளர் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், அவர் இலங்கையின் புதிய நிர்வாகத்தின் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளனர்.