19.6 C
Scarborough

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

Must read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார் . ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாளான நேற்று அவர் சவுதி சென்றார். அங்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் இன்று கட்டார் சென்றார். அவர் கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்ய கட்டார் ஒப்பந்தம் செய்தது. கட்டார் விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் 160 விமானங்களை அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ட்ரம்ப் , தமீம் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article