13.5 C
Scarborough

அனைத்து பெண்களுக்கும் அண்ணனாக துணை நிற்பேன்

Must read

அனைத்து பெண்களுக்கும் அண்ணனாக துணை நிற்பேன்….த.வெ.க தலைவர் விஜய் கடிதம்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பில் மன வேதனை அடைந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“கல்வி வளாகம் தொடங்கி, ஒவ்வொரு நாளும் தாய்மார்கள், தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் அட்டூழியங்கள், பாலியல் குற்றங்கள் என பல கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? ஆட்சியாளர்களிடம் இது தொடர்பில் எத்தனை தடவைகள் கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதற்காகவே இக் கடிதம். எல்லா சூழ்நிலைகளிலும் அண்ணனாகவும் அரணாகவும் உங்களுடன் உறுதியாக நிற்பேன். எதைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

பாதுகாப்பான தமிழகத்தை படைப்போம். அதற்கான உத்தரவாதத்தை விரைவாக சாத்தியப்படுத்துவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article