அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் Marco Rubio அடுத்த வாரம் Ontario வின் Niagara பிராந்தியத்தில் G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
கனடாவின் Foreign Affairs அமைச்சரான Anita Anand ஏனைய நாடுகளான France, Germany, Italy, Japan, United Kingdom, United States மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை வரவேற்பார் என்று Global Affairs Canada தெரிவித்துள்ளது.
November 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் Australia, Brazil, India, Kingdom of Saudi Arabia, Mexico, Republic of Korea, South Africa மற்றும் Ukraine உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களையும் கனடா வரவேற்கவுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார மீள்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான கனிமங்கள் போன்ற உலகளாவிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்கள் குறித்த கனடாவின் G7 நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று Global Affairs Canada கூறுகிறது.
March மாதம் Quebec இன் Charlevoix இல் நடந்த G7 அமைச்சர்கள் கூட்டத்தில், ஆர்க்டிக், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் முழுவதும் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதற்கு கனடா முன்மொழிந்தது, அதாவது தடைகளைத் தவிர்க்க முயற்சிக்கும் கப்பல்கள் மற்றும் பல்லுயிர் பெருங்கடலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

