13.9 C
Scarborough

அஜித் படத்தை விரைவில் இயக்குவேன் – லோகேஷ் கனகராஜ்

Must read

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

‘கூலி’ படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.

‘கூலி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மேலும் ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் “அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன். இது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. சுரேஷ் சந்திரா மூலமாக சில மாதங்களுக்கு முன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அவர் கார் ரேஸிலும் நான் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆனால், நிச்சயமாக நடக்கும். எனக்கும் அவருக்கும் ஒரு டைம்லைன் வரும் பொழுது கண்டிப்பாக படத்தை இயக்குவேன். அவரை இயக்குவது என் ஆசைகளில் ஒன்று” என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article