இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனையான வந்தனா கட்டாரியா நேற்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய, மாநில அணிகள் சார்பில் ஹாக்கி விளையாடி வந்தவர் வந்தனா கட்டாரியா. இந்தியாவுக்காக இதுவரை 320 ஹாக்கி போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 158 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார்.
மேலும், இந்திய ஹாக்கி வரலாற்றில் அதிக ஹாக்கி போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றவர் கட்டாரியா. ஓய்வு முடிவு குறித்து நேற்று செய்தியாளர்களிடம் வந்தனா கட்டாரியா கூறியதாவது:
ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம் என்று நினைத்தேன். அதனால் ஓய்வு முடிவை அறிவித்தேன். இந்த ஓய்வு முடிவு எளிதானது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.