ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மான்ஸ்டர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.
இதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சோலோ ஹீரோயினாக நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம்தான் DNA.
அதர்வா-நிமிஷா சஜயன் இணைந்து நடித்திருந்த இப்படம் கடந்த ஜூன் 20ம் திகதி திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.