டொராண்டோ நகரின் கிழக்கு முனையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரைத் தேடி வருவதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், செப்டம்பர் 15 ஆம் திகதி இரவு 11 மணிக்கு சற்று முன்பு டன்டாஸ் தெரு கிழக்கு மற்றும் பேப் அவென்யூ பகுதியில் இருந்துவந்த முறைப்பாட்டுக்கு பதிலளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்தபோது நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, சொத்துக்களைத் திருடி, அதிகாரிகள் வருவதற்குள் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20 வயதுடைய ஒரு நபர் என்று தெரிவிக்கும் பொலிஸார், சந்தேக நபர், கருமையான நிறம் மற்றும் மெல்லிய உடலமைப்புடன் கடைசியாக வெளிர் நிற மேலாடை, கருமையான பேன்ட் மற்றும் முகத்தை மூடும் துணியுடன் காணப்பட்டார் என கூறியுள்ளனர்.
புலனாய்வாளர்கள் அவரது படங்களை வெளியிட்டுள்ளனர், மேலும் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து 416-808-5500 என்ற எண்ணில் உடனடியாக பொலீஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

