நடிகர் சூரி நடிப்பில் கடந்த மே மாதம் 16-ந் திகதி ‘மாமன்’ படம் வெளியானது. இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்தில் தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர். இப்படம் இதுவரைக்கும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாமன் படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

