விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
மேலும் அந்த உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக அவர்களை கழற்றி விட இந்திய தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய விமர்சனங்களுக்கு அவர்கள் இறுதியாக அவுஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி டக் இருந்தாலும் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாண்டு இருந்தார். அதேபோல முதல் போட்டியில் விரைந்து விக்கட் இழந்த ரோஹித் சார்பா இறுதி இரு போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட்டு இருந்தார்.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக்கிண்ணத்துக்கான இந்திய அணியில் அவர்களுடைய பெயரை இப்போதே எழுதலாம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசி இருப்பதாவது,
“இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடுவதற்காக விராட். ரோகித் தங்களைத் தாங்களே தயாராக வைத்திருந்தனர்.
இப்போது என்ன நடந்தாலும் அவர்கள் ஓட்டங்கள் எடுத்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களிடம் உள்ள திறமை மற்றும் அனுபவத்திற்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் உறுதியாக இருப்பார்கள்.
குறிப்பாக தற்போது அவர்கள் இருக்கும் பார்முக்கு நீங்கள் அவர்களுடைய பெயரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இப்பொழுதே எழுதலாம் என கூறியுள்ளார்.

