ஓடிடியில் (OTT-யில்) முன்னணி தளங்களில் ஒன்றான Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா தானாம். இப்படத்தை இதுவரை Netflix-ல் 27 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலிடத்தை மகாராஜா படம் பிடித்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தை விஜய்யின் லியோ மற்றும் மூன்றாவது இடத்தை அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் பிடித்துள்ளன.