பியர்சன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை 401 இல் நின்று கொண்டிருந்த மிசிசாகாவைச் சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
தனது வாகனம் ஒரு சிறிய விபத்தை சந்தித்த நிலையில் அவர் அதிலிருந்து இறங்கி நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தபோது இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது, போக்குவரத்துக்கு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் மோதியதை அடுத்து உயிரிழந்த நபரும் மேலும் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏனைய இருவரின் நிலைமை குறித்து தெரியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.