வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பிச்சென்ற நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மிசிசாகாவில் நடந்த விபத்தில் சந்தேக நபரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல் சீராக இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ள நிலையில் விசாரணைகள் தொடங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை 12:30 மணியளவில் கிழக்கு லேக்ஷோர் பகுதியின் எலிசபெத் வீதி அருகில் விபத்து நடந்ததாகக் அழைப்பொன்றில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில், ஒரு ஆண் சந்தேக நபர் வாகனத்தை மோதி விட்டு தெருவைக் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த நபர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசேட பணியகம் விசாரணையை கையாளும் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
.