ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டோபிகோக்கில் சம்பவித்த வாகன விபத்தை தொடர்ந்து ஒரு வாகனம் கவிழ்ந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் கிப்ளிங் அவென்யூ பகுதிக்கு காலை 7 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதியதாக முறைப்பாடு கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
இரு சாரதிகளும் சம்பவ இடத்திலேயே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாரதிகளில் ஒருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்
குறித்த பாதை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலும் அந்தப் பகுதியில் தாமதங்களை ஏற்படும் என வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.