வட மாகாணத்தில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொலிசாரின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாகவு மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாடா மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு கசிப்பு உற்பத்தி கால்நடை கடத்தல் ஆகியன வட மாகாணத்தில் அதிகரித்துள்ளன.
இவை தொடர்பாக முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டாலும் சில வேலைகளில் அசமந்த போக்குடன் பொலிஸார் செயல்படுவதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

