ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயெர் லெவர்குசனின் முகாமையாளரான ஸ்கெபி அலோன்ஸோ கழகத்தில் தொடருவதாக அவர்களுக்கு கூறியுள்ளதாக அக்கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் சிமொன் றொல்ஃப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கு அலோன்ஸோ செல்வாரெனக் கூறப்பட்டிருந்தது.