2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL), ஆறாவது சீசனுக்கான அதிகாரப்பூர்வ ப்ரேண்ட் அம்பாசிடராக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு குறித்த போட்டிகள் நடத்தப்படாத நிலையில் இந்த வருட போட்டிகள் பிரமாண்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் “யுனிவர்ஸ் பொஸ்” என்று அழைக்கப்படும் கெய்ல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீசனில் நுழையும் நிலையில் இந்த லீக்கிற்கு கவர்ச்சியையும் உலகளாவிய ஈர்ப்பையும் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லங்கா பிரீமியர் லீக் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இலங்கையின் முதன்மையான T20 போட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, இதில் சிறந்த சர்வதேச நட்சத்திரங்களும் வளர்ந்து வரும் உள்ளூர் திறமைசாலிகளும் இடம்பெறுகின்றனர்.
இந்த நிலையில் கெய்லின் வரவு லீக்கின் உலகளாவிய கவனத்தையும் அதன் மறுபிரவேச சீசனுக்கான உற்சாகத்தையும் மேலும் அதிகரிக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான சரியான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

