ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
பார்சிலோனா சார்பாக றபீனியா இரண்டு கோல்களையும், எரிக் கர்சியா, லமீன் யமால் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் கிலியான் மப்பே பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 82 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பார்சிலோனா உள்ளது. 75 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும், 70 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றன.